வந்தது சீனாவின் சினோபாம் தடுப்பூசி- நேரடியாக சென்று பெற்றுக்கொண்டார் கோட்டாபய.

 வந்தது சீனாவின் சினோபாம் தடுப்பூசி- நேரடியாக சென்று பெற்றுக்கொண்டார் கோட்டாபய.


சீனத் தயாரிப்பான சினோபாம் கொரோனா தடுப்பூசியை ஏற்றிச் வந்த விமானம் இன்று (31) காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது.

இவ்வாறு கொண்டு வரப்பட்ட 06 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் ஒப்படைத்தார்.

தடுப்பூசிகளை ஏற்றுக்கொள்வதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வில், மருந்து வழங்கல், மற்றும் ஒழுங்குமுறைத்துறை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமனா, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சீன அரசுக்கு நன்கொடை வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றின் போது இலங்கைக்கு உதவியதற்கும் அவர் சீனாவுக்கு நன்றி தெரிவித்தார்.

சீன தடுப்பூசியைப் பெறுவதற்கான முயற்சிகளில் கடந்த வாரத்தில் பல தடைகள் இருந்தபோதிலும், தடுப்பூசிகள் இன்று இலங்கைக்கு வருவதை உறுதி செய்ய அதிகாரிகளால் முடிந்தது என்று அமைச்சர் கூறினார்.

இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென்ஹோங், தேவைப்படும் காலங்களில் இலங்கைக்கு உதவ சீனா எப்போதும் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

இலங்கையை மையமாகக் கொண்ட சீன நாட்டினருக்கு இந்த தடுப்பூசி முதலில் வழங்க அனுமதிக்க இலங்கை அரசு எடுத்த முடிவை அவர் பாராட்டினார்.

இந்நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட பல அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.