முக்கிய பரீட்சைகள் பிற்போடப்படும் சாத்தியம்; கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

 முக்கிய பரீட்சைகள் பிற்போடப்படும் சாத்தியம்; கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்


2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயரதரப் பரீட்சை மற்றும் தரம் ஐந்திற்க்கான புலமைப்பரிசில் பரீட்சையை தாமதப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

திட்டமிடப்பட்டபடி பாடத்திட்டத்தை நிறைவுசெய்ய முடியாதுள்ள நிலையில் அது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான விசேட கலந்துரையாடல், பரீட்சைகள் திணைக்களம், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மாகாண கல்வி பணிப்பாளர்கள் இடையே நடைபெற்றதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இதுவரை உள்ளடக்கப்பட்ட பாடத்திட்டங்கள் மற்றும் பிரச்சினை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து பாடசாலை மட்டத்தில் மேலதிக தகவல்களை சேகரித்த பின்னர் இறுதி முடிவு எட்டப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை க.பொ.த. உயரதரப் பரீட்சை மற்றும் தரம் 5 ற்கான புலமைப்பரிசில் பரீட்சையை என்பன ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்றுவரும் நிலையில் மாற்றம் குறித்த அறிவிப்பை கல்வி அமைச்சு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.