அசாத்சாலி கைது செய்யப்பட்டமை குறித்து பொலிஸ்மா அதிபருக்கு சென்ற அவசர கடிதம்

 அசாத்சாலி கைது செய்யப்பட்டமை குறித்து பொலிஸ்மா அதிபருக்கு சென்ற அவசர கடிதம்


முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் கைது தொடர்பில் இலங்கை முஸ்லிம் பேரவை, பொலிஸ் மா அதிபர் சீ.டி. விக்ரமரட்னவிற்கு அவசர கடிதமொன்றை எழுதியுள்ளது.

அசாத் சாலி பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அசாத் சாலி, ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், ரம்ஸி ராசீக் உள்ளிட்ட சில முஸ்லிம்கள், முன்னணி செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட போதிலும் அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரையில் முன்வைக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைத்து வகையான கடும்போக்குவாதம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு எதிராக அசாத் சாலி குரல் கொடுத்து வந்தார் எனவும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் அசாத் சாலி கைது செய்யப்பட்டமை முஸ்லிம் சமூகத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.

ஸஹ்ரான் தொடர்பில் அசாத் சாலி முறைப்பாடு செய்திருந்தார் எனவும், ஈஸ்டர் தாக்குதல்களை முதலில் கண்டித்தவர் அவர் எனவும் முஸ்லிம் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது. அசாத் சாலி தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடாத்துமாறும் குற்றச்செயல்களில் ஈடுபட்டாவிட்டால் அவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் முஸ்லிம் பேரவை, பொலிஸ் மா அதிபரிடம் கோரியுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.