இன்று முதல் நாடு முழுவதும் விசேட ஆய்வு நடவடிக்கை ஆரம்பம்.

 இன்று முதல் நாடு முழுவதும் விசேட ஆய்வு நடவடிக்கை ஆரம்பம்.


தினந்தோறும் இடம்பெறும் முச்சக்கர வண்டி மற்றும் உந்துருளி விபத்துக்களினால் 5-6 பேர் உயிரிழப்பதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதனால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைத்துக்கொள்வதற்காக, இன்று முதல் நான்கு நாட்களுக்கு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டிகளின் தரம் மற்றும் அவை இயங்கும் நிலை என்பவற்றை ஆராய்வதற்கே இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

உந்துருளி மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதே இந்த சோதனையின் நோக்கமாகவுள்ளது என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.