ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 800 ரூபாயை தாண்டக்கூடும்.

 ஒரு கிலோ கோழி இறைச்சியின் விலை 800 ரூபாயை தாண்டக்கூடும்.


 ' சந்தையில் உருவாக்கப்பட்டிருக்கும் வர்த்தக மாஃபியா காரணமாக, பண்டிகை காலங்களில் ஒரு கிலோ

கோழி இறைச்சியின் விலை 800 ரூபாயை தாண்டக்கூடும்' என அனைத்து இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் அத்தநாயக்க தெரிவித்தார்.

விலங்கு தீவனத்தின் விலை அதிகரிப்பு காரணமாக, உற்பத்தியாளர்கள் சாதாரண விலையில் இறைச்சி வழங்குவதிலிருந்து விலகுகிறார்கள் எனவும் சந்தையில் கோழி பற்றாக்குறையை உருவாக்க ஐந்து பெரிய தொழில் முனைவோர் முயற்சிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், வரும் பண்டிகை காலங்களில், கோழி இறைச்சியின் விலையை அதிகரிப்பதற்கு இறைச்சிக்கான பற்றாக்குறையை பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சந்தை விலை 550-650 ரூபாய் வரையிலும், ஒரு முட்டையின் மொத்த விலை 12 ரூபாயாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.