தொடர்ந்தும் பேஸ்புக் காதலினால் தற்கொலை அதிகரிப்பு...!

 தொடர்ந்தும் பேஸ்புக் காதலினால் தற்கொலை அதிகரிப்பு...!


50 வயது பணக்காரர் - 24 வயது பெண் பேஸ்புக் காதல் , கடிதம் வழுதி வைத்துவிட்டு தற்கொலையில் முடிந்த சம்பவம் இலங்கையில் பதிவாகியுள்ளது.

நீர்கொழும்பில் பேஸ்புக் காதலால் 24 வயதுடைய பெண் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

50 வயதுடைய பணக்காரரான ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் 24 வயதுடைய பெண்ணை பேஸ்புக் ஊடாக காதலித்துள்ளார்.

நீர்கொழும்பை சேர்ந்த குறித்த பெண் ஹோட்டல் உரிமையாளருடன் நீண்ட காலமாக காதல் தொடர்பில் இருந்துள்ளார். பின்னர் குறித்த பெண் தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளர்.

விசாரணையின் போது குறித்த பெண்ணால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் தானும் ஹோட்டல் உரிமையாளரும் எடுத்துக் கொண்ட அந்தரங்க புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதாக அச்சுறுத்தல் விடுத்தமையினால் மன வருத்தமடைந்து இந்த முடிவை எடுத்ததாக கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய 50 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.