இன்று முதல் நாடளாவிய ரீதியில் வாகனங்களை பரிசோதிக்க நடவடிக்கை

 இன்று முதல் நாடளாவிய ரீதியில் வாகனங்களை பரிசோதிக்க நடவடிக்கை


நாடளாவிய ரீதியில் இன்று முதல் ஒரு மாதத்திற்கு வாகனங்களை பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மது போதை மற்றும் முறையற்ற விதத்தில் வாகனங்களை ஓட்டும் சாரதிகளைக் கைது செய்யும் நோக்கில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, இந்த விடயம் குறித்து பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தௌிவுபடுத்தினார்.

மது போதையில் வாகனம் செலுத்துவோரை பரிசோதிப்பதற்கு தேவையான உபகரணங்களை நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பெற்றுக்கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

போட்டி போட்டுக்கொண்டு பஸ்களை செலுத்தும் சாரதிகளையும் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.