உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எங்களால் தடுக்க முடியவில்லை

 உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எங்களால் தடுக்க முடியவில்லை..


 என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கின்றோம் - உண்மையான குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர்- சஜித்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை எங்களால் தடுக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டை ஏற்க தயாராகவுள்ளேன் என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என மக்கள் கருதுவதாக தெரிவித்துள்ளார்.

உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை கண்டுபிடிப்பதற்கான உரிய விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுதாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகளை கண்டுபிடிப்பதற்காக வெளி;ப்படையான விசாரணைகள் இடம்பெறவேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டு;ள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என்பது மக்கள் கருத்து என தெரிவித்துள்ள எதிர்கட்சி தலைவர் இது என்னால் உருவாக்கப்பட்ட கதையில்லை இந்த நாட்டின் பொதுவான மக்களின் கருத்து என குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக வெளிப்படையான விசாரணையே இந்த நேரத்தின் தேவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதிகளுக்கும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவாகளுக்கும் மரண தண்டனையை விதிக்கவேண்டும் என்பதே எனது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு என தெரிவித்துள்ள அவர் இதற்கான சட்ட மூலத்தை நாடாhளுமன்றத்தில் அறிமுகப்படு;த்தவேண்டும், எனது இந்த கருத்திற்காக சிலர் என்னை எதிர்க்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.