மனைவியைக் கொலை செய்து எரித்து தானும் அதே தீயில் பாய்ந்து தற்கொலை செய்த கணவன்.

 மனைவியைக் கொலை செய்து எரித்து தானும் அதே தீயில் பாய்ந்து தற்கொலை செய்த கணவன்.


கம்பளை – அங்குருமுல்ல பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த நபர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அங்குருமுல்ல பகுதியிலுள்ள வீடு நேற்று புதன்கிழமை தீக்கிரையாகி உயிரிழந்த நிலையில் இரு சடலங்கள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பில் தெரிய வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

அங்குருமுல்ல – வத்தஹேன பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய பெண்ணும் 68 வயதான அவரது கணவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

தம்பதியினரான இவர்கள் நீண்ட நாட்களான பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இவர்களுக்கு எதிராக கம்பளை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை இடம்பெற்று வருவதாகவும் விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

இந்நிலையிலேயே குறித்த நபர் அவரது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து பின்னர் சடலத்தை தீயிட்டு எரித்துள்ளதுடன், தானும் அதே தீயில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளது.

சம்வம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.