சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனை.

 சிறுமியை துஷ்பிரயோகம் செய்த நபருக்கு மேல் நீதிமன்றம் வழங்கிய தண்டனை.


சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த இரு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 34 வருட கடுழிய சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த தண்டனையை 15 வருடங்களில் நிறைவு செய்ய வேண்டும் என கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த உத்தரவிட்டுள்ளார்.

அதற்கும் மேலதிகமாக பிரதிவாதிக்கு 10,000 ரூபா தண்டப் பணத்தையும் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் துஷ்பிரயோகத்திற்கு ஆளான சிறுமிக்கு 2 இலட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக செலுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

அந்த நஷ்ட ஈட்டு தொகையை செலுத்த தவறினால் பிரதிவாதிக்கு 5 வருட சாதாரண சிறைத் தண்டனையை வழங்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

விளையாடுவதற்காக வந்த அயல் வீட்டு சிறுமியை தனது பிள்ளையை வெளியில் அனுப்பிவிட்டு குறித்த நபர் துஷ்பிரயோகப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் குற்றவாளிக்கு எதிரான 3 குற்றச்சாட்டுக்களில் இரண்டு சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.


மூன்றாவது குற்றச்சாட்டில் இருந்து பிரதிவாதியை விடுவித்து விடுதலை செய்வதாகவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.