மாகாண பஸ் சேவைகளுக்காக வழங்கப்பட்டிருந்த நிவாரண காலயெல்லை நீடிப்பு.

 மாகாண பஸ் சேவைகளுக்காக வழங்கப்பட்டிருந்த நிவாரண காலயெல்லை நீடிப்பு.


கொரோனா தொற்றுக்கு மத்தியில் உள்ளக மாகாண பயணிகள் பஸ் சேவைகளுக்காக வழங்கப்பட்டிருந்த நிவாரணங்கள் பலவற்றை மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு:

07. கொவிட் 19 தொற்று நிலைமையில் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து பேரூந்து சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளல்.

கொவிட் 19 தொற்று நிலைமையில் மாகாணங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து பேரூந்து சேவைகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதற்கு பேரூந்து உரிமையாளர்களிடமிருந்து அறிவிடப்படும் புதுப்பித்தல் கட்டணம், தாமதக் கட்டணம், விலைமனுக் கோரல் கட்டணம், நேரசூசி கட்டணம், உள்நுழைவு அனுமதிப்பத்திர கட்டணம் மற்றும் அதிவேக நெடுஞ்சாலை தற்காலிக அனுமதிப்பத்திர கட்டணம் போன்றவற்றை 2020 ஆம் ஆண்டின் இறுதி வரை விடுவிப்பதற்காக 2020 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. பேரூந்து சேவைகளை மீள்நிலைக்கு கொண்டு வருவதற்கு மேலும் சில காலம் எடுக்கும் என்பதால், குறித்த மானியங்களுடன் கீழ்க்காணும் மானியங்களையும் 2021 மார்ச் மாதம் 31 ஆம் வரை நீடிப்பதற்காகவும் போக்குவரத்து அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• வருடாந்த விலைமனுக் கோரல் கட்டணத்தின் 10% வீதம் அல்லது 15,000/= ரூபாய்கள் போன்ற பெறுமதிகளில் அதிக பெறுமதி கொண்ட தொகையை அறவிடல்

• அதிவேக நெடுஞ்சாலை தற்காலிக அனுமதிப்பத்திரக் கட்டணத்தின் 10% வீதத்தை அறவிடல்

• நேரசூசி மற்றும் உள்நுழைவு அனுமதிப்பத்திர கட்டணத்தை விடுவித்தல்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.