மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி முதலில் பாலர் பாடசாலைக்கு செல்ல வேண்டும்.

 மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி முதலில் பாலர் பாடசாலைக்கு செல்ல வேண்டும்.


மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு, ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (9) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது, “வெளிநாட்டுச் செலாவணி சட்டத்தினைப் பற்றிப் பேசும் பொழுது, இந்த சட்டத்திற்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழு கூட்டம் நடைபெற்று வருகின்றது.

அதனை இலங்கைக்கு எதிரான ஒரு மனித உரிமை ஆணைக்குழுவாக இலங்கை மக்களுக்கு சித்தரிக்கப் பார்க்கின்றார்கள். நாங்கள் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை நிறுத்த வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். மனித உரிமை என்பது தமிழ், சிங்கள, முஸ்லிம் ஆகிய அனைவருக்கும் உரித்தான ஒன்று.

இலங்கையில் தற்போதுள்ள பிரதம அமைச்சரே முதன் முதலாக மனித உரிமைக் குழு பற்றி எமக்கு கூறியவர். 2009 ம் ஆண்டு யுத்தம் நிறைவுற்ற போது ஏற்பட்ட மனித உரிமைகள் பற்றிய பிரச்சினைகள் இருக்கின்றன.

இதற்கு மேலதிகமாக வெலிகடை சம்பவம், அண்மையில் ஏற்பட்ட மகர சிறைச்சாலை சம்பவம், ஜனாசா புதைத்தல் பற்றிய பிரச்சினை என்பன காணப்படுகின்றன.

அவ்வாறு மனித உரிமை என்ற விடயம் இல்லாமல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியுமென்று நான் நினைக்கவில்லை. இலங்கைப் பொருளாதாரத்தில் மனித உரிமைகள் பின்னிப்பிணைந்ததொன்றாகக் காணப்படுகின்றன.

மேலும் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் போது மேற்கத்தேய நாடுகளின் ஒத்துழைப்பு இல்லாவிடின் நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது. ஜனநாயகம் இல்லாத நாட்டிலே பிள்ளை பெற்றெடுப்பதற்குக் கூட உரிமை இல்லை.

எமது நாட்டு மக்களுக்கு இவ்வாறு வாழ முடியும் என்று நான் நினைக்கவில்லை. ஜனாதிபதி அண்மையிலே PhD பெற்றதாகவும், இரண்டாவது PhDயும் பெறப்போவதாகவும் கூறியிருந்தார். உண்மையில் இந்த நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமென்றால் மனித உரிமைகள் பற்றி கற்பதற்கு ஜனாதிபதி பாலர் பாடசாலைக்குச் முதலில் செல்ல வேண்டும்.

PhDக்கு முன்னர் மனித உரிமை பற்றிய ஆரம்பப் பாடசாலைக்கு அவர் செல்ல வேண்டும். அன்று பிரதமர் அவர்கள் ஜனாசா அடக்கத்திற்கு அனுமதி கொடுப்பதாக கூறிவிட்டு பின்னர் இல்லையென மறுக்கின்றார்.

மேலும் ,மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் மாகாண சபைத் தேர்தல் நடத்துவதாகவும் காணமலாகப்பட்டார்கள் இல்லையெனக் கூறிவிட்டு காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்திக்கச் செல்கின்றார்கள். மனித உரிமைகளை முதலில் மதிக்க பழகிக் கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.