புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்கலுக்கு சீல்.

 புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த மூன்று நிறுவனங்கலுக்கு சீல்.


புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய இரசாயனம் அடங்கிய தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்த

மூன்று நிறுவனங்களை சீல் வைப்பதற்கு நுகர்வோர் அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த தேங்காய் எண்ணெய் நுகர்வுக்கு பொறுத்தமற்றதென மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, அவற்றை மீள் ஏற்றுமதி செய்யும் வரையில் அந்த மூன்று நிறுவனங்களுக்கும் சீல் வைத்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது.

 இருப்பினும், சம்பந்தப்பட்ட தேங்காய் எண்ணெய் சந்தைக்கு வெளியிடப்படவில்லை என்று அமைச்சர் அருண்டிகா பெர்னாண்டோ நேற்று (26) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இருப்பினும், நுகர்வோர் விவகார ஆணையம், நுகர்வுக்கு தகுதியற்ற புற்றுநோய்களைக் கொண்ட தேங்காய் எண்ணெய் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களைக் கருத்தில் கொண்டு, தேங்காய் எண்ணெயின் மாதிரிகள் நேற்று (26) முதல் நாடு முழுவதும் உள்ள கடைகளில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.