காட்டு யானை தாக்குதலுக்கு இருவர் பலி.

 காட்டு யானை தாக்குதலுக்கு இருவர் பலி.இன்று (27) காலை காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார். 

பொலன்னறுவை அத்தனகடவல யாய 31 பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

பண்ணையில் இருந்து இன்று காலை தனது வீடு நோக்கி வந்துக் கொண்டிருந்த போது காட்டு யானை குறித்த நபரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இதன்போது, குறித்த நபரை சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு காட்டு யானை இழுத்துச் சென்றுள்ளதாக கிராமவாசிகள் தெரிவித்தனர். 

குறித்த கிராமத்தை சுற்றி மின் வேலி அமைக்கப்பட்டுள்ள போதும் அதில் மின்சாரம் இல்லாத காரணத்தால் காட்டு யானைகள் இவ்வாறு கிராமத்திற்குள் நுழைவதாக கிராமவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

இதேவேளை, நேற்றைய தினம் (26) அம்பாறை கொடவெஹெர பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான 28 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.