இனம் மற்றும் மதங்களின் பெயர்களில் கட்சிகளை ஆரம்பிக்க தடை.

 இனம் மற்றும் மதங்களின் பெயர்களில் கட்சிகளை ஆரம்பிக்க தடை.


அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் போது, கட்சிகளின் பெயர்களுக்கு இனம் மற்றும் மதங்களை அடிப்படையாகக் கொண்ட பெயர்களை வைக்கக்கூடாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

மதம் மற்றும் இனங்களை அடிப்படையாகக் கொண்ட கட்சிகளை பதிவு செய்யாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு கூறுகின்றது.

தற்போது காணப்படுகின்ற சட்டத்திற்கு அமைய, அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் போது தேசிய கட்சியாக மாத்திரமே பதிவு செய்ய தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் நேற்றைய தினம் கூடி, ஆராய்ந்த போதே இந்த தீர்மானத்தை எட்டியுள்ளனர்.

தற்போது பதிவு செய்யப்பட்டுள்ள ஏற்றுக்கொள்ளக்கூடிய கட்சிகளின் பெயர்கள் இனம் மற்றும் மதங்களை அடிப்படையாகக் கொண்டு காணப்படுமாக இருந்தால், அந்த பெயர்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அறிவிப்பு விடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

அவ்வாறான கட்சிகளின் பெயர்களை மாற்றுவதற்கான கால எல்லையொன்றும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிடுகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.