வரலாற்றில் இன்று

 வரலாற்றில் இன்று



மார்ச் 29 கிரிகோரியன் ஆண்டின் 88 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 89 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 277 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்.

👉1632 – கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது.

👉1792 – 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னன் இறந்தான்.

👉1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை ஜெர்மானிய வானியலாளர் ஹைன்ரிக் ஓல்பர்ஸ் கண்டுபிடித்தார்.

👉1831 – துருக்கிக்கு எதிராக பொஸ்னிய எழுச்சி ஆரம்பமானது.

👉1849 – பஞ்சாபை ஐக்கிய இராச்சியம் கைப்பற்றியது.

👉1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த மங்கல் பாண்டே என்ற சிப்பாய் பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.

👉1867 – கனடாக் கூட்டமைப்பை ஜூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.

👉1879 – ஆங்கிலோ-சூலு போர்: தென்னாபிரிக்காவில் கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000 சூலுக்களை வென்றனர்.

👉1886 – ஜோர்ஜியாவின் அட்லாண்டாவில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பாவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.

👉1945 – இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் குண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது.

👉1971 – மை லாய் படுகொலைகள்: அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.

👉1973 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.

👉1974 – நாசாவின் மரைனர் 10 விண்கலம் புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.

👉2004 – பல்கேரியா, எஸ்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, ருமேனியா, சிலவாக்கியா, சிலொவேனியா ஆகியன நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.

👉2004 – அயர்லாந்து புகைத்தலை உணவகங்கள் உட்பட எல்லா வேலையிடங்களிலும் தடை செய்த முதல்நாடானது.

👉2005 – யாஹூ! 360° சேவை ஆரம்பிக்கப்பட்டது.

👉2007 – கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.

👉2008 – பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.


இன்றைய தின பிறப்புக்கள்.


👉1790 – ஜான் டைலர், 10வது அமெரிக்க ஜனாதிபதி (இ. 1862)

👉1918 – சாம் வோல்ற்றன், அமெரிக்க விற்பனை நிறுவனங்களான வோல் மார்ட், சாம்ஸ் கிளப் ஆகியவற்றின் நிறுவனர் (இ. 1992)

👉1927 – ஜோன் வேன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர் (இ. 2004)

👉1941 – ஜோசப் டெய்லர், இளையவர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்


இன்றைய தின இறப்புக்கள்


👉1909 – டபிள்யூ. ஜி. ரொக்வூட், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினர் (பி. 1843)

👉1985 – ஜார்ஜ் பீட்டர் மர்டாக், மானிடவியலாளர் (பி. 1897)

👉2000 – சி. கே. சரஸ்வதி, தமிழ்த் திரைப்பட நடிகை


இன்றைய தின சிறப்புகள்


👉தாய்வான் – இளைஞர் நாள்

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.