கட்டுநாயக்க சுதந்தர வர்த்தக வலயத்தில் மீண்டும் கொவிட் பரவல்.

கட்டுநாயக்க சுதந்தர வர்த்தக வலயத்தில் மீண்டும் கொவிட் பரவல்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் மேலும் 43 பேருக்கு கொரோன வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக நேற்றையதினம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அதன்படி, கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் புதிதாக 69 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக covid-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டுத் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை நேற்றைய தினம் மேலும் புதிதாக 297 கொவிட் தொற்றாளர்கள் நாட்டில் அடையாளம் காணப்பட்டதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்தது. 

அதில் 6 பேர் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் எனவும் பேலியகொடை கொவிட் கொத்தணியுடன் தொடர்புடைய 236 பேரும் மற்றும் 55 பேர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அதன்படி, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 87 ஆயிரத்து 286 ஆக அதிகரித்துள்ளது. 

அதில் 83,958 பேர் பூரணமாக குணமடைந்து வெளியேறி உள்ள நிலையில் 2,803 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.