நாட்டின் டொலரின் பெறுமானத்தைசேமிப்பதற்காக வாகனங்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளன... இறக்குமதி செய்ய விசேட வேலைத்திட்டம் தயாராகிறது.

நாட்டின் டொலரின் பெறுமானத்தைசேமிப்பதற்காக வாகனங்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளன... இறக்குமதி செய்ய விசேட வேலைத்திட்டம் தயாராகிறது.

வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கவுள்ளதாக

திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்திருக்கிறார்

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே திறைசேரியின் செயலாளர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் தனிபட்ட பாவனைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களின் இறக்குமதி இடைநிறுத்தப்பட்டுள்ளன. நாட்டின் டொலரின் பெறுமானத்தை சேமிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இது சம்பந்தமாக வாகன இறக்குமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வாகன இறக்குமதியின் போது நாட்டின் அபிவிருத்திக்கு முதலிடம் வழங்கும் வகையில் வேலைத்திட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாக திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகல மேலும் தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.