இலங்கை தேசியக் கொடியை கால் துடைக்கும் கம்பளத்திலும், பாதணியிலும் அச்சிட்டதால் வெடித்து சர்ச்சை
இலங்கை தேசியக் கொடியை கால் துடைக்கும் கம்பளத்திலும், பாதணியிலும் அச்சிட்டதால் வெடித்து சர்ச்சை.
உலகின் முன்னணி நிறுவனமான அமேசான் நிறுவனம் இலங்கையின் தேசிய கொடியுடன் கூடிய கால் துடைக்கும் கம்பளம் ஒன்றை இணையத்தளம் வழியாக பொருட்களை விற்பனை செய்து வரும் சந்தையில் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் பொருட்களை விற்பனை செய்யும் இந்த நிறுவனம் சிங்கப்பூரில் இருந்து இந்த கால் துடைக்கும் கம்பளத்தை உலகம் முழுவதும் விநியோகித்து வருகிறது.
இந்நிலையில், இந்த கால் துடைக்கும் கம்பளம் இலங்கை சந்தையில் விற்பனை செய்யப்பட்டால், எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை நுகர்வோர் சேவை அதிகார சபையின் தலைவர் மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் வொஷிங்டனை தலைமையிடமாக கொண்டுள்ள இந்த நிறுவனம் கால் துடைக்கும் கம்பளத்தை 12 டொலர்களுக்கு விற்பனை செய்து வருகிறது.
இதனை இலங்கைக்கு அனுப்பி வைக்க 9.20 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படுகின்றது. அமேசான் நிறுவனத்தின் வருடாந்த வருவாய் 21 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்பதுடன் அந்த நிறுவனத்தில் 12 லட்சத்து 98 ஆயிரம் பேர் தொழில் புரிந்து வருகின்றனர்.
✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.