ஐந்து பெண்களை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை நபருக்கு வெளிநாடொன்றில் தண்டனை.

ஐந்து பெண்களை அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த இலங்கை நபருக்கு வெளிநாடொன்றில் தண்டனை.


அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைப் பிரஜையொருவக்கு குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

44 வயதான சம்பத் சமரநாயக்க என்பவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (2018) பிரிஸ்பேனின் இரவு விடுதியொன்றில் தன்னை, உபெர் வாகன சாரதியாக போலியாக அடையாளம் காட்டி, ஐந்து பெண்களை அழைத்துச் சென்றுள்ளதுடன், அவர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

அவர் மீது பிரிஸ்பேன் மாவட்ட நீதிமன்றத்தில் பாலியல் வன்கொடுமைகள், சுதந்திரத்தை பறித்தல், அநாகரீகமான செயல்கள் மற்றும் பொதுவான தாக்குதல் உள்ளிட்ட 18 குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டது.

இந் நிலையில் வியாழக்கிழமை 18 குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளி எனக் கண்டறிய நடுவர் மன்றம் மூன்று மணி நேரத்திற்கும் குறைவான நேரத்தை எடுத்தது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.