கொவிட் தொற்று ஜனாஸாக்கள் கிழக்கில் அடக்கம்- சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டது.

 கொவிட் தொற்று ஜனாஸாக்கள் கிழக்கில் அடக்கம்- சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டது.



கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்களின்

 உடல்களை இன்று முதல் அடக்கம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கிழக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள இடமொன்றில் இரண்டு உடல்கள் அடக்கம் செய்யப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒட்டமாவடி மஜ்மா நகரில் இன்று வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர் முதலாவது கொவிட் 19 ஜனாஸா நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி மஜ்மா நகர் அபிவிருத்தி சங்க தலைவர் சமீம் அவர்கள் உறுதிப்படுத்தினார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.