மக்களே அவதானம்; புற்றுநோயை உண்டாக்கும் பெருந்தொகை தேங்காய் எண்ணெய் சந்தையில்

 மக்களே அவதானம்; புற்றுநோயை உண்டாக்கும் பெருந்தொகை தேங்காய் எண்ணெய் சந்தையில்.


ஆபத்தை ஏற்படுத்தும் மேலும் ஒருதொகை தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இறக்குமதி செய்து சுத்தப்படுத்தாத தேங்காய் எண்ணெய் 8300 மெட்றிக் டொன் கொழும்புத் துறைமுகத்திலிருந்து நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய் ஏற்படக்கூடிய ஆபத்தை ஏற்படுத்தும் பெருந்தொகையில் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் கொண்டுவரப்பட்ட 13 கன்டேனர்கள் துறைமுகத்தின் ஊடாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு, சந்தைக்கு விடப்பட்டதாக நேற்றையதினம் தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த நிலையிலேயே மேலும் 8300 மெட்றிக் டொன் தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விற்பனைக்காக விடப்பட்டிருப்பதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.