வாகனங்களின் தேய்ந்த டயர்கள் தொடர்பிலான சோதனை தற்காலிகமாக நிறுத்தம்.

 வாகனங்களின் தேய்ந்த டயர்கள் தொடர்பிலான சோதனை தற்காலிகமாக நிறுத்தம்.


தேய்ந்த டயர்களுடன் பயணிக்கும் வாகனங்களை சோதனைக்கு உட்படுத்தும் விசேட சோதனை நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனைக் குறிப்பிட்டார்.

டயர்களை விநியோகித்தல் மற்றும் அரசாங்கத்தின் தேவைகள் தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, டயர்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறினார்.

அதேபோல, டயர்கள் குறித்து ஆராய்வதற்கும், தண்டனை வழங்கும் செயற்பாடுகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றது என அவர் குறிப்பிட்டார்.

வாகனங்களில் டயர்கள் உரிய தரத்தில் காணப்படுகின்றனவா என்பது தொடர்பிலான விசேட சோதனை நடவடிக்கைகள் கடந்த 22ம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதன்படி, நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து பொலிஸார், சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

எனினும், பொருளாதார ரீதியில் தாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள இந்த தருணத்தில், பொலிஸார் தண்டப் பணம் அறவிடுவது நியாயமற்ற செயற்பாடு என சாரதிகள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், டயர் இறக்குமதிக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகள் விதித்துள்ள பின்னணியில், டயர்களின் விலைகள் அதிகரித்துள்ளதுடன், டயர்களுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.