வரலாற்றில் இன்று

 வரலாற்றில் இன்று



மார்ச் 26 கிரிகோரியன் ஆண்டின் 85 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 86 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 280 நாட்கள் உள்ளன.


இன்றைய தின நிகழ்வுகள்


👉1199 – இங்கிலாந்து மன்னன் முதலாம் ரிச்சார்ட் பிரான்சை முற்றுகையிடும்போது படுகாயமடைந்தான். 11 நாட்களின் பின்னர் இவன் இறந்தான்.

👉1431 – பிரெஞ்சு வீராங்கனை 19 வயது ஜோன் ஒஃப் ஆர்க் மீதான முன் விசாரணைகள் ஆரம்பமானது.

👉1552 – குரு அமர் தாஸ் சீக்கியரின் மூன்றாவது மதகுருவானார்.

👉1953 – போலியோ தடுப்பூசி அறிமுகம்.

👉1812 – வெனிசுவேலாவின் கரக்காஸ் நகர் நிலநடுக்கத்தில் அழிந்தது.

👉1871 – இலங்கையில் முதலாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இடம்பெற்றது. 2,405,287 பேர் பதிவாகினர்.

👉1872 – கலிபோர்னியாவில் லோன் பைன் என்ற இடத்தில் 7.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டது.

👉1917 – முதலாம் உலகப் போர்: காசாப் பகுதியில் இடம்பெற்ற முதலாவது சமரில் பிரித்தானியப் படைகளின் முன்னேற்ற சுமார் 17,000 துருக்கியர்களால் தடுக்கப்பட்டது.

👉1934 – ஐக்கிய இராச்சியத்தில் வாகன ஓட்டுனர்களுக்கான பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது.

👉1942 – இரண்டாம் உலகப் போர்: போலந்தில் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் முதற்தடவையாக பெண்கள் சிறைக்கைதிகளாயினர்.

👉1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானுடனான இவோ ஜீமா சண்டை முடிவுக்கு வந்ததாக ஐக்கிய அமெரிக்கா அறிவித்தது.

👉1953 – ஜொனாஸ் சால்க் தனது போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தினார்.

👉1958 – ஐக்கிய அமெரிக்க இராணுவம் எக்ஸ்புளோரர் 3 விண்கலத்தை ஏவினர்.

👉1971 – கிழக்கு பாகிஸ்தான் பாகிஸ்தானிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. வங்காள தேச விடுதலைப் போர் ஆரம்பமானது.

👉1979 – இஸ்ரேல்-எகிப்து அமைதி ஒப்பந்தம் வாஷிங்டனில் கைச்சாத்தானது.

👉1997 – சுவர்க்கத்தின் வாயில் என்ற மதக் குழுவில் தற்கொலை செய்துகொண்ட 39 பேரின் உடல்கள் கலிபோர்னியாவில் கண்டெடுக்கப்பட்டன.

👉1998 – அல்ஜீரியாவில் 2 அகவைக்குட்பட்ட 32 குழந்தைகள் உட்பட 52 பேர் கத்திகளாலும் வாள்களாலும் வெட்டப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.

👉2006 – மியான்மாரின் புதிய தலைநகராக நாய்பிடோ என்ற புதிய நகரம் இராணுவ ஆட்சியாளர்களால் அறிவிக்கப்பட்டது.

👉2000 – விளாடிமீர் பூட்டின் ரஷ்யாவின் அதிபராகத் தெரிவானார்.

👉2005 – தமிழீழ தேசிய தொலைக்காட்சி கிளிநொச்சியில் ஆரம்பம்.

👉2006 – முதலாவது அறிவியல் தமிழ் மாநாடு சென்னையில் நடைபெற்றது.

👉2007 – கொழும்பில் கட்டுநாயக்கா விமானப்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் விமானங்கள் தாக்குதல் நடத்தின.


இன்றைய தின பிறப்புக்கள்


👉1874 – றொபேட் ஃபுறொஸ்ட் அமெரிக்கக் கவிஞர் (இ. 1963)

👉1913 – பால் ஏர்டோசு, அங்கேரிய கணிதவியலாளர் (இ. 1996)

👉1916 – கிறிஸ்டியன் ஆன்பின்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1995)

👉1938 – அந்தனி லெகெட், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

👉1940 – நான்சி பெலோசி, அமெரிக்க அரசியல்வாதி

👉1941 – ரிச்சர்ட் டாக்கின்ஸ், படிவளர்ச்சி உயிரியலாளர்

👉1951 – கார்ல் வைமன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்

👉1962 – ஜான் ஸ்டாக்டன், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர்


இன்றைய தின இறப்புகள்


👉1827 – லுடுவிக் ஃவான் பேத்தோவன், ஜெர்மனிய மேற்கத்திய செவ்விசை இயற்றுநர் (பி. 1770)

👉1892 – வால்ட் விட்மான், அமெரிக்கக் கவிஞர் (பி. 1819)

👉2013 – சுகுமாரி, தென்னிந்திய திரைப்பட நடிகை (பி. 1940)


இன்றைய தின சிறப்புகள்


👉வங்காள தேசம் – விடுதலை நாள் (1971)✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.