பதுளை நகரில் முறிந்து வீழ்ந்த மரம். சில வாகனங்களுக்கு சேதம்.

 பதுளை நகரில் முறிந்து வீழ்ந்த மரம். சில வாகனங்களுக்கு சேதம்.


பதுளை நகரில் பெய்துவரும் கடும் மழையுடனான வானிலையினால், பாரிய மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

இந்த மரம் இன்று பிற்பகல் முறிந்து வீழ்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பதுளை நகரிலுள்ள எரிப்பொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலுள்ள பாரிய மரமொன்றை இவ்வாறு முறிந்து வீழ்ந்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்த நபர் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மேலும், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றும் இதனால் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குறித்த பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முறிந்து வீழ்ந்த மரத்தை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.