மற்றொருவருக்காக ஆள்மாறாட்டம் செய்து கணித பாட பரீட்சை எழுதிக் கொண்டிருந்தவர் சிக்கினார்.

 மற்றொருவருக்காக ஆள்மாறாட்டம் செய்து கணித பாட பரீட்சை எழுதிக் கொண்டிருந்தவர் சிக்கினார்.


அநுராதபுரம் பகுதியில் க.பொ.த சாதாரண தர பரீட்சையின் பரீட்ச்சார்த்தி ஒருவருக்கு பதிலாக பரீட்சை

எழுத முற்பட்ட வேறு ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் இபலோகம பொலிஸ் அதிகாரிகளினால் இவ்வாறு 21 வயதுடைய இளைஞன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கணித பரீட்சையில் உறவினர் ஒருவருக்காக முன்னின்றமை தொடர்பில் பரீட்சை கண்காணிப்பாளருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திஸ்ஸமஹராம, வீரவல பகுதியை சேர்ந்த குறித்த நபர் பரீட்சை எழுதுவதற்காக அநுராதபுரத்திற்கு வருகை தந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னரும் வலஸ்முல்ல மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் இது போன்று பரீட்சை எழுத முற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.