மேல் மாகாண பாடசாலைகளின் ஏனைய வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு.

மேல் மாகாண பாடசாலைகளின் ஏனைய வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிப்பு.


மேல்மாகாணத்தில் தரம் ஐந்து, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தரம் தவிர்ந்த ஏனைய அனைத்து தரங்களுக்குமான பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

கல்வியமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் மேல்மாகாணத்தில் தரம் ஐந்து, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர மற்றும் உயர்தர பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் நேற்று கல்வியமைச்சர் அறிவித்திருந்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

[09/03, 14:38] Chan Mohamed: யாழ் பாதுகாப்பு படையினரால் 1000 கர்பிணிகளுக்கு உலர் உணவு பொதிகள்.


யாழ்ப்பாண பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் படையினர்களால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நிதியுதவியுடன், சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த ஏழை கர்ப்பிணிகள் மற்றும் விதவை பெண்களுக்கு 1000 உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (06) யாழ்ப்பாணம் - சுன்னாகம் தெற்கு விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

இது பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அறிவுறுத்தலின் படி யாழ். பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேராவினால் ஹேமாஸ் நுகர்வோர் பிரைவேட் லிமிடெட், நெஸ்லே லங்கா பிரைவேட் லிமிடெட், மாலிபன் பிஸ்கட் பிரைவேட் லிமிடெட், 'மனுசாத் தெரன சமூக உதவித் திட்டம் மற்றும் கொழும்பு தரனா அறக்கட்டளை. ஆகியவற்றிடம் விடுத்த வேண்டுக்கோளுக்கு அமைய சிவில் - இராணுவ ஒத்துழைப்பு நடவடிக்கைகளுக்கு அமைய வடிவமைக்கப்பட்ட நிவாரண பகிர்ந்தளிப்பு ஆகும்.

யாழ் பாதுகாப்புப் படை தலைமைதயக தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்தா பெரேரா தலைமையிலான விநியோக விழா, விநியோகம் நடைபெறுவதற்கு மத தலைவர்களினால் ஆசீர்வதிக்கப்பட்டது. ஒவ்வொரு நிவாரணப் பொதியிலும் அரிசி, பருப்பு, சர்க்கரை, பால் மா, தேயி தேயிலை , கோதுமை மாவு, டின் மீன், மசாலா, தானியங்கள் மற்றும் அதிக சத்துணவுகள் உள்ளடக்கியிருந்ததுடன் அதே சந்தர்ப்பத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களுக்கு கொசு வலைகள், பாம்பர்கள், பால் போட்டில்கள், சுகாதார பொருட்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட குழந்தைகளின் தேவைகளும் வழங்கப்பட்டன.

ஒரு சுருக்கமான உரையை நிகழ்த்திய யாழ்ப்பாணத் தளபதி, நன்கொடையளர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, பொது மக்களை பாதுகாக்க படையினர் எந்நேரமும் தயாராக இருப்பதாகக் கூறினார். நிகழ்ச்சியின் முடிவில், யாழ்ப்பாண மகளிர் முன்னணித் தலைவி திருமதி டி தயானி, இந்த தொண்டு நிகழ்ச்சிக்கு படையினரின் பங்களிப்பைப் பாராட்டியதோடு தளபதி அவர்களுக்கு இராணுவத் தளபதியின் ஆசீர்வாதங்களுடன் இந்த வகையான நிவாரணப் பணிகளை மேற்கொண்டதற்கு நன்றி தெரிவித்தார்.

அனைத்து மதங்களின் மதத் தலைவர்கள், 51 வது படைப்பிரிவின் தளபதி வடக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையக சிரேஸ்ட அதிகாரிகள், பிரிகேட் தளபதிகள், நெஸ்லே, மாலிபன் நிறுவனங்களின் பிரதிநிதிகள், சில அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.