பாடசாலை பாடத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் சட்டக் கல்வி.

 பாடசாலை பாடத்திட்டத்திற்குள் உள்வாங்கப்படும் சட்டக் கல்வி.


பாடசாலை பாடத்திட்டத்திற்குள் சட்டக் கல்வியை உள்வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவிக்கின்றார்.

அதற்கான பாராளுமன்ற குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோரின் தலைமையில் கூடிய கூட்டமொன்றின் போது, ஒன்றிணைந்த இணை ஆலோசனை செயற்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வி மறுசீரமைப்பு, பல்கலைக்கழக மற்றும் தொலைநோக்கு கல்வி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், சிவநேசத்துரை சந்திரகாந்தன், வீரசுமன வீரசிங்க, சாகர காரியவசம், அமரகீர்த்தி அத்துகோரல, டயானா கமகே, மேஜர் சுதர்ஷன தெனிபிட்டிய ஆகியோரின் பங்குப்பற்றுதலுடன் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சட்டம் குறித்த அறிவு, பொதுமக்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றமையினால், சட்டம் குறித்து அடிப்படை புரிந்துணர்வை மாணவர்களுக்கு வழங்குவது மிகவும் முக்கியமானது என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.