அவிசாவளையில் குழிக்குள் சிக்குண்ட இருவர் உயிரிழப்பு.

 அவிசாவளையில் குழிக்குள் சிக்குண்ட இருவர் உயிரிழப்பு.


அவிசாவளை − வெரலுபிட்டி பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட மாணிக்கக்கல் அகழ்வு குழிக்குள் சிக்குண்டு இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

கடும் மழையுடனான வானிலை நிலவிய நிலவிய தருணத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

இதையடுத்தே, இந்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டு, அவிசாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

குறித்த இருவரும் உயிரிழந்த விதம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிக்கின்றார்.

44 மற்றும் 45 வயதான இருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.