இலங்கையில் தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளிவந்த மற்றுமொரு அதிர்ச்சி செய்தி.

 இலங்கையில் தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளிவந்த மற்றுமொரு அதிர்ச்சி செய்தி.


எதிர்காலத்தில் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிக்கக்கூடும் என்று இலங்கை தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் கூறுகிறது.

புற்றுநோயை ஏற்படுத்தும் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் அண்மைக்காலங்களில் நாடளாவிய ரீதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெயில் 13 கொள்கலன்களில் புற்றுநோய் பதார்த்தம் கலந்திருப்பது தெரியவந்ததை அடுத்து அவற்றை மீண்டும் ஏற்றுமதி செய்ய பரிந்துரைத்தது.

இதனால் தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்கள் பண்டிகை காலங்களில் நாட்டில் தேங்காய் எண்ணெய் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று தெரிவித்தனர்.

பண்டிகை காலத்துடன் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிக்கக்கூடும் என்று அனைத்து இலங்கை பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.