வாகன நம்பர் பிளேட்டுகளில் இருந்து மாகாணங்களின் குறியீடுகளை நீக்க அமைச்சரவை அனுமதி அளிக்கப்பட்டது.

 வாகன நம்பர் பிளேட்டுகளில் இருந்து மாகாணங்களின் குறியீடுகளை நீக்க அமைச்சரவை அனுமதி அளிக்கப்பட்டது.


 வாகன நம்பர் பிளேட்டுகளில் இருந்து மாகாணங்களின் குறியீடுகளை ( ex; CP / WP / EP ) நீக்க

அமைச்சரவை அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது என்று  வாகன ஒழுங்குமுறை, பஸ் போக்குவரத்து சேவைகள், ரயில் பெட்டிகள் மற்றும் மோட்டார் கார் தொழில் துறை ராஜாங்க  அமைச்சர் லலித் டி சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், வாகன இலக்க தகடுகளில்  இருந்து மாகாணங்களின் குறிப்பை நீக்குவதாக அறிவித்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்றும்  தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, வாகன உரிமையாளர்கள் பதிவுசெய்யப்பட்ட மாகாணங்களிலிருந்து இடமாற்றம் செய்யும்போது அவர்களின் எண் தகடுகளை மாற்றத் தேவையில்லை என்றும், புதிய வாகன இலக்க தகடை  பயன்படுத்தலாம் என்றும் அவர் கூறினார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.