குண்டுதாரிகளின் புகைப்படங்களில் ரிஷாட் பதியூதீன், ஜனாதிபதி,மற்றும் பிரதமரின் தலைகளை இணைத்து பதிவேற்றியவர் கைது.

 குண்டுதாரிகளின் புகைப்படங்களில் ரிஷாட் பதியூதீன், ஜனாதிபதி,மற்றும் பிரதமரின் தலைகளை இணைத்து பதிவேற்றியவர் கைது.


ஜனாதிபதி மற்றும் பிரதமரின் புகைப்படங்களுடன், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய

குண்டுடதாரிகளின் புகைப்படங்களை இணைத்து, போலியான புகைப்படங்களை தயாரித்தவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அந்தப் புகைப்படங்களை இணைத்தளங்களில் தரவேற்றி, இனங்களுக்கு இடையே குரோதங்களை ஏற்படுத்மும் செயற்பாட்டில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழே, குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட மாத்தளை பி​ரதேச சபையின் முன்னாள் உறுப்பினர், கொழும்பு பிரதான நீதவான் புத்திக சிறி ராகலவின் உத்தரவின் ​பேரில், எதிர்வரும் 18 ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மாத்தளை பிரதேச சபையின் முன்னாள் உப- தலைவரும் சுயாதீன குழுவின் தற்போதைய உறுப்பினருமான

மாத்தளை யட்டவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட மலல் பண்டார ஏக்கநாயக்க என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவங்களில் தற்கொலைத் தாக்குதல்கள் நடத்திய குண்டுதாரிகளுடன், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் , ஜனாதிபதி மற்றும் பிரதமரின் தலைகளை இணைத்துள்ளார்.

“ 100 சேர்ட்டுகள் அணிந்திருந்தாலும் இனங்காணமுடியா ஒன்று இந்த படங்களில் உறுதியாகிறது” என எழுதி, புகைப்படங்களை தயாரித்து, அதனை இணையத்தளங்களில் தரவேற்றியுள்ளார்.

அதுதொடர்பில், குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளிலியே, மேற்படி நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.