கறுப்பு ஞாயிறு தினத்தில் குறான் ஆவணங்களுடன் தேவாலயம் சென்ற பெண் − அச்சுறுத்தலை அடுத்து கைது.

 கறுப்பு ஞாயிறு தினத்தில் குறான் ஆவணங்களுடன் தேவாலயம் சென்ற பெண் − அச்சுறுத்தலை அடுத்து கைது.


கட்டுகஸ்தோட்டை − சியம்பலாகஸ்தென்ன கத்தோலிக்க தேவாலயத்தில் கடந்த ஞாயிற்று கிழமை இடம்பெற்ற கறுப்பு ஞாயிறு திருப்பலிக்கு, குறானிலுள்ள விடயங்களை எழுதிய ஆவணங்களுடன் வருகைத் தந்த பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த பெண், தேவாலயத்திற்குள் வருகைத் தந்த வேளையிலிருந்து, அவரின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், அவரது பெயர் முஸ்லிம் பெயரை ஒத்ததாக இருந்துள்ளதாக அறிய முடிகின்றது.

இந்த நிலையில், குறித்த பெண்ணை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளனர்.

53 வயதான அதே பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரையே, பொலிஸார் தமது பொறுப்பிற்கு எடுத்துள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெண் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.