அசோக் அபேசிங்கவை இன்று CID இல் ஆஜராகுமாறு அழைப்பு.

 அசோக் அபேசிங்கவை இன்று CID இல் ஆஜராகுமாறு அழைப்பு.


பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று (09) ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து வௌியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக அவர் அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டார்.

தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் தற்கொலை குண்டுதாரிகளுக்கு நிதி கிடைத்த விதம் குறித்து குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்க அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.

அந்த கருத்து தொடர்பில் விசாரணையை மேற்கொள்ளுமாறு பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

அந்த முறைப்பாட்டிற்கு அமைய பாராளுமன்ற உறுப்பினர் அசோக் அபேசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்து விசாரணை மேற்கொள்வதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.