மியன்மாரில் ஏழு வயது சிறுமி சுட்டுக்கொலை

 மியன்மாரில் ஏழு வயது சிறுமி சுட்டுக்கொலை


மியன்மாரில் ஏழு வயது சிறுமி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டசம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மண்டலாயில் உள்ள வீட்டில் அவர் 

சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

என்ற நகரில் துப்பாக்கி சூட்டு காயங்களால் ஏழு வயது சிறுமி உயிரிழந்துள்ளார் என இறுதிநிகழ்வுகளை நடத்துபவர்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளனர்.

வீட்டினுள் தந்தையுடன் சிறுமி காணப்பட்டவேளை படையினர் தந்தையை இலக்குவைத்தனர் இதன்போதே சிறுமி கொல்லப்பட்டார் என உள்ளுர்ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோதிலும் அவரை காப்பாற்ற முடியவில்லை என மருத்துவ முதலுதவி பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் 19வயது சகோதரரும்கைதுசெய்யப்பட்டுள்ளார் என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

14 வயது சிறுவன் ஒருவன் மன்டலாயில் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர் 7வயது சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளமை குறித்து சேவ் தசில்ரன் கடும்கண்டனம் வெளியிட்டுள்ளது.

சிறுவர்கள் கொல்லப்படுவது குறிப்பாக அவர்கள் வீட்டில் இருக்கும்போது கொல்லப்படுவது கவலையளிக்கின்றது என தெரிவித்துள்ள சேவ்தசில்ரன் நாளாந்தம் பல சிறுவர்கள் கொல்லப்படுவது மனித உரிமைகளை முற்றாக படையினர் புறக்கணித்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.