ராஜபக்சாக்களின் கோட்டையில் வெடித்தது போராட்டம்.

 ராஜபக்சாக்களின் கோட்டையில் வெடித்தது போராட்டம்.


விவசாயிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டம் காரணமாக சுமார் 3 மணிநேரம் மாத்தரை கொழுப்பு பிரதான வீதி முடக்கப்பட்டத்துடன் அரசாங்கத்துக்கும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

யானைகளை பராமரிப்பதற்காக விவசாயக் காணிகளை அரசாங்கம் கபளீகரம் செய்துள்ளதாக அறிந்த விவசாயத்தில் ஈடுபடும் மக்கள் கடந்த 53 தினங்களாக முன்னெடுத்த உணவு தவிர்ப்புப் போராட்டம் அமைச்சர் சமல் ராஜபக்ச வழங்கிய உறுதிமொழியை அடுத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் பூதாகாரமாக வெடித்தது.

அரசாங்கம் தங்களை ஏமாற்றுவதாக குற்றம்சாட்டி மீண்டும் விவசாயச்செய்கையில் பெண்கள் இருவர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து நேற்றைய தினம் விவசாயிகள் அம்பலாந்தோட்டை நகரில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.

ஆளுட் கட்சியின் தேர்தல் கோட்டையான அம்பாந்தோட்டை, அம்பலாந்தோட்டை போன்ற இடங்களில் இவர்களுக்காக நேரடியாக சென்று வாக்கு சேகரித்த பிக்குகளும் இணைந்து வீதியை மறித்து பாரிய போராட்டதை முன்னெடுத்தனர்.

யானைக்கும் மனிதனுக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்துவதற்காக இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்தாவிட்டால் அம்பாந்தோட்டை தொடக்கம் கொழும்பு வரை விவசாயிகள் பேரணியாக செல்வதாகவும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.