வெளிநாடுகளிலிருந்து வருகைதருவோர் பின்பற்ற வேண்டிய,

 வெளிநாடுகளிலிருந்து வருகைதருவோர் பின்பற்ற வேண்டிய,


சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டி வெளியானது.

வெளிநாடுகளிலிருந்து வருகை தரும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகள் அடங்கிய வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் இன்று(வியாழக்கிழமை) இந்த வழிகாட்டி வெளியிடப்பட்டுள்ளது.

தடுப்பூசி போடப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் இலங்கைக்கு வருகை தரும் பயணிகள், நாட்டிற்கு வந்து பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 24 மணி நேரத்திற்குள் சோதனை முடிவைப் பெற்று வீடுகளுக்கு செல்ல முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு தடுப்பூசி ஏற்றப்பட்டு 14 நாட்களுக்குப் பின்னர், இலங்கை வருகின்ற நபர், முதல்நாள், தனியார் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டு, அங்கீகரிக்கப்பட்ட தனியார் சோதனைக் கூடத்தில் பி.சி.ஆர் பரிசோதனை உட்படுத்தப்படுவார். அதன் பின்னர், 7 நாட்கள் அவர் தொடர்ந்து அதே விடுதியில் தங்கியிருக்க வேண்டும்.

குறித்த 7 நாட்களும், சுகாதார பாதுகாப்பு வழங்கப்பட்ட முக்கிய இடங்களுக்கு செல்ல அவருக்கு அனுமதி உண்டு. எனினும், அவர் மீண்டும் அதே விடுதியில் தங்க வேண்டும்.

7 நாட்களின் பின்னர், இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, தொற்றுறுதி இல்லையாயின், அவர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்.

தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாமல், இலங்கை வருகின்றவர்கள், 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுவார்கள். அவர்களுக்கு முதலாம் நாள், 11 ஆம் நாள் மற்றும் 14ஆம் நாளில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்றுறுதி இல்லை என நிரூபிக்கப்பட்டால், அவர்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்படுவார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.