இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக இன்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.

 இலங்கையில் கொவிட்-19 தொற்று காரணமாக இன்றும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.


இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தற்போது (18) அறிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்கனவே 537 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மரணத்துடன், இலங்கையில் இதுவரை 538 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டவர் நேற்று (17) மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் விபரம்.

இப்பாகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த, 60 வயதான ஆண் ஒருவர், கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில், கொவிட்-19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டு, முல்லேரியா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு மரணமடைந்துள்ளார். அவரது மரணம் நேற்று (17) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம், குருதி விஷமடைவு அதிர்ச்சி மற்றும் கொவிட்-19 நியூமோனியா என, அறிவிக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.