இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாரிஸில் ஒன்று திரண்ட இலங்கைத் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள்.

 இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பாரிஸில் ஒன்று திரண்ட இலங்கைத் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள்.


இலங்கையில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் என்ற போர்வையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கை தொழிலாளர்கள் சுரண்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த போராட்டம் நேற்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை பாரிஸில் உள்ள இலங்கை தூதரகம் முன் பாரிய போராட்டம் ஒன்று நடைபெற்றது.

நான்கு முக்கிய பிரச்சினைகளில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தும் நோக்கில் இந்த போராட்டம் மேற்கொள்ளப்பட்டதாக ஆர்ப்பாட்ட அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

பாரிஸில் வசிக்கும் சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லிம் இலங்கையர்கள் ஒன்றிணைந்து சிங்களம் மற்றும் தமிழில் அணிவகுத்து போராட்டத்தை நடத்தினர்.

போராட்டத்திற்குப் பிறகு, பிரான்சிற்கான இலங்கை தூதரிடம் ஒரு மனுவை கையளிக்க இருந்த போதும், தூதரகம் மூடப்பட்டு பொலிசார் நிறுத்தப்பட்டதால் அந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

வெளிநாடு சென்ற இலங்கையருக்கு நாடு திரும்ப வெளிவிவகார அமைச்சின் அனுமதியை பெற வேண்டும் என்பதை ரத்துசெய்.

14 நாட்கள் விலை உயர்ந்த ஹோட்டல்களில் தனிமைப்படுத்துதலை ரத்துசெய்து, தாயகத்திற்கு முன்பு போலவே சுதந்திரமாகத் திரும்புவதற்கான வழிமுறையை மாற்றி, சரியான சுகாதார நடைமுறைகளுக்கு உட்பட்டு தங்கள் சொந்த வீடுகளில் தனிமைப்படுத்தும் திறனைக் கொடுக்க வேண்டும்.

விமான சேவை டிக்கெட்டுகளுக்கு நியாயமற்ற உயர் விலையை நிர்ணயிக்க வேண்டாம்.

மத்திய கிழக்கில் உள்ள நமது இலங்கை சகோதர சகோதரிகளை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யப்பட்ட காப்பீட்டில் இலவசமாக திருப்பி அனுப்பு என தெரிவிக்கப்படுகின்றது என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.