தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் கட்டுப்பாடுகள்.

 தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் கட்டுப்பாடுகள்.


தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரிய அளவிலான ஒன்றுகூடலுக்கு தடை விதிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

இருப்பினும் விடுமுறை நாட்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.

குடும்பங்கள் ஒன்று கூடுவது தடைப்படும் என்பதனால் பயணக் கட்டுப்பாடுகள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என குறிப்பிட்ட அவர், இருப்பினும் புத்தாண்டுக்கு முன்னதாக பொலிஸார், சுகாதார அதிகாரிகள் வழிகாட்டுதல்களை வழங்குவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் குறித்த நாட்களில் தற்போதுள்ள சுகாதார வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே வலியுறுத்தினார்.

இதேவேளை கொரோனா தொற்றுநோயின் அச்சுறுத்தல் இலங்கையில் தற்போதும் காணப்படுவதால் அனைவரும் சுகாதார வழிகாட்டுதல்களை அவசியம் பின்பற்ற வேண்டும் என பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.