சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொரோனா கொத்தணி.

 சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் கொரோனா கொத்தணி.


சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட 1200 பிசிஆர் சோதனைகளில் 474 பேருக்கு கொவிட்தொற்று உள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தொழிற்சங்க தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

சுத்திகரிப்பு நிலையத்தில் ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகளுக்காக சுமார் 400 தற்காலிக தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர், மேலும் பொது சுகாதார ஆய்வாளர்கள் வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்கள் இந்த செயல்பாட்டின் போது முறையாக பின்பற்றப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ள தொழிலாளர்களிடமிருந்து கிடைத்த தகவல்களுக்கு அமைய, பொது சுகாதார பரிசோதகர்கள் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் சீரற்ற அன்டிஜென் சோதனைகளை மேற்கொண்டனர். அங்கு 20 தொழிலாளர்கள் கொவிட் தொற்றுக்கு உள்ளானமை அடையாளம் காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, 1200 ஊழியர்கள் மீது பி.சி.ஆர் சோதனைகள் நடத்தப்பட்டன, இதில் 474 பேர் தொற்றுக்கு உள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.