80 இலட்சம் ரூபா பணத்துடன் இரத்தினபுரியில் கைதான பெண்: காரணத்தை விளக்கும் DIG அஜித் ரோஹண.

 80 இலட்சம் ரூபா பணத்துடன் இரத்தினபுரியில் கைதான பெண்: காரணத்தை விளக்கும் DIG அஜித் ரோஹண.                     


             

இரத்தினபுரி – பெல்மடுலை பகுதியில் உரிய ஆதாரங்களின்றி சுமார் 80 இலட்சம் ரூபா பணத்தை வைத்திருந்தமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, இரத்தினபுரி – பெல்மடுலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது, உரிய ஆதாரங்கள் இன்றி, பெருந்தொகைப் பணத்தை வைத்திருந்தமை தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த குறித்த பெண்ணை , பொலிஸார் சோதனைக்கு உட்படுத்தியபோதே குறித்த பணத் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸாருக்கு சந்தேக நபரான பெண் உரிய ஆதாரங்களை தெரிவிக்க தவறியதன் காரணமாக அவரைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஓப்பநாயக்க பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளனார். அவரிடமிருந்து 80 இலட்சத்து 31 ஆயிரம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், சந்தேக நபரான பெண்ணுக்கு பணத்தொகை எவ்வாறு கிடைக்கப் பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், அவர் சட்டவிரோத செயற்பாடுகள் ஊடாக இந்த பணத்தை சேகரித்துள்ளாரா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகிறது. பெல்மடுலை பொலிஸார் அது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.