பசறை பஸ் விபத்து பஸ் சாரதி வாக்குமூலத்தில் தெரிவித்தது என்ன?

 பசறை பஸ் விபத்து பஸ் சாரதி வாக்குமூலத்தில் தெரிவித்தது என்ன?


14 பேரின் உயிரை காவுக்கொண்ட பசறை – 13ம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்து குறித்து, பஸ் சாரதியின் தொலைபேசி தரவுகள் அடங்கிய அறிக்கையை, உரிய தொலைபேசி நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

விபத்து இடம்பெறும் சந்தர்ப்பத்தில் பஸ்ஸின் சாரதி தொலைபேசியை பயன்படுத்தியுள்ளதாக, தமது பல வாக்குமூலங்கள் பதிவாகியுள்ளதென விசாரணைகளை நடத்தும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் பஸ்ஸின் சாரதி, இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தான் குறித்த சந்தர்ப்பத்தில் தொலைபேசியை பயன்படுத்தவில்லை என பஸ்ஸின் சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தான் பஸ்ஸின் வேகத்தை கட்டுப்படுத்துவதற்கு முயற்சித்த போதிலும், அந்த சந்தர்ப்பத்தில் வேகக்கட்டுப்பாட்டு கட்டமைப்பு செயற்படவில்லை என சாரதி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

லணுகலவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் கடந்த 20ம் திகதி பசறை – 13ம் கட்டை பகுதியில் வைத்து விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்திருந்ததுடன், 30திற்கும் அதிகமானோர் காயமடைந்திருந்தனர்.

காயமடைந்த அனைவரும் பதுளை மற்றும் பசறை ஆகிய வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.