வெள்ளவத்தை விபத்து : ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம் − இரவுநேர களியாட்ட விடுதியிலிருந்து சென்ற இருவர் கைது.

 வெள்ளவத்தை விபத்து : ஒருவர் உயிரிழப்பு, மூவர் காயம் − இரவுநேர களியாட்ட விடுதியிலிருந்து சென்ற இருவர் கைது.


வெள்ளவத்தை − மெரின் ட்ரைவ் வீதீயில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

விபத்தில் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காரொன்று வீதியில் பயணித்தவர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீதும் மோதியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தை அடுத்து, காரின் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், காரின் சாரதி மற்றும் வாகனத்தில் பயணித்த நபர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் இரவு நேர களியாட்ட விடுதிக்கு சென்று மதுபோதையில் வீடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

காயமடைந்த மூவரும் களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.