சிங்கராஜ காடழிப்புக்கு எதிராக களமிறங்குகின்றது ஐக்கிய தேசியக் கட்சி.

 சிங்கராஜ காடழிப்புக்கு எதிராக களமிறங்குகின்றது ஐக்கிய தேசியக் கட்சி.


சிங்கராஜ காடழிப்பு மற்றும் நாட்டின் ஏனைய பகுதிகளில் இடம்பெறும் காடழிப்புக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி பாரிய போராட்டமொன்றை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதன்படி, கொழும்பு – தும்முல்ல சந்தியில் எதிர்வரும் 6ம் திகதி முற்பகல் 9 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில், பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டது.

இந்த கூட்டத்தில் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் பலரும் கலந்துக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, காடழிப்புக்கு எதிரான சித்திர போட்டியொன்றையும் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இந்த சித்திர போட்டி ஸ்ரீகொத்த தலைமையகத்திற்கு முன்பாக எதிர்வரும் 2ம் திகதி நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.