கறுவா சிகரட்டினால் விமல் வீட்டுக்கு செல்ல வேண்டுமா?

 கறுவா சிகரட்டினால் விமல் வீட்டுக்கு செல்ல வேண்டுமா?


இலங்கை கறுவாவினால் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத கறுவா சிகரட்டை அறிமுகப்படுத்தி அமைச்சர் விமல் வீரவங்ச இலங்கை புகையிலை நிறுவனம் மற்றும் சிலோன் டுபேகோ நிறுவனங்களுடன் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் உற்பத்தித் துறையில் ஆயுர்வேத கறுவா சிகரட்டுகள் ஒரு பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று தொழில்துறை அமைச்சர் விமல் வீரவங்ச கூறுகிறார்.

கொழும்பில் உள்ள கிங்ஸ்பரி ஹோட்டலில் நேற்று (17) இந்த ஆயுர்வேத சிகரட் பிரச்சாரத்தை முன்னெடுத்த போது அவர் இதை கூறினார்.

100% இலங்கை கறுவாப்பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் Lion Heart என பெயரிடப்பட்ட இந்த சிகரட்டை கண்டுபிடித்தவர் சமன்ன புஞ்சிகேவா

நாட்டின் மூலப்பொருட்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த சிகரட் புகைத்தலுக்கு அடிமையாகும் ஒருவருக்கு மாற்றீடாக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.