உலகில் முதல் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை! ஆச்சரியத்தில் மருத்துவர்கள்: எந்த நாட்டில் தெரியுமா?

 உலகில் முதல் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியுடன் பிறந்த குழந்தை! ஆச்சரியத்தில் மருத்துவர்கள்: எந்த நாட்டில் தெரியுமா?


உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வரும் நிலையில், அந்த நோயை எதிர்க்கும் சக்தியுடன் குழந்தை பிறந்துள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. ஒரு சில நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு இருந்தாலும், அந்நாட்டில் இருக்கும் மக்கள் இதை சாதரணமாகவே நினைத்து கொள்வதால், அந்த நோயின் எதிர்ப்புசக்தி தானாகவே அவர்களில் உடலில் வந்துவிடுகிறது.

இந்நிலையில், தற்போது அமெரிக்காவில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பெண்ணுக்கு பிறந்த பெண் குழந்தைக்கு இயற்கையாகவே நோய்த் தொற்றுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த பெண் சுகாதாரப் பணியாளர் ஒருவர் தன்னுடைய பிரசவத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்பு மாடர்னா எனப்படும் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார்.

இதையடுத்து தற்போது அப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையை பரிசோதித்து பார்த்ததில், குழந்தையின் உடலில் கொரோனாவுக்கான எதிர்ப்புசக்தி இயற்கையாகவே உருவாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தடுப்பூசி செலுத்திக்கொண்ட அப்பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு ஆன்டிபாடி உருவாகியிருப்பது ஆச்சரியம் அளிப்பதாகவும், தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு உருவான எதிர்ப்பு சக்தி தாயின் நஞ்சுக்கொடி வழியாக மற்ற ஊட்டச்சத்துகளுடன் சேர்ந்து கிடைத்திருக்க வேண்டும் என்றும் நம்புகின்றனர்.

இருப்பினும், இந்த எதிர்ப்பு சக்தி குழந்தையின் உடலில் எவ்வளவு நாட்களுக்கு இருக்கும் என்பது தெரியவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.