எதிர்காலத்தில் மாலிங்க பந்துவீச்சு ஆலோசகராகும் வாய்ப்பு.

 எதிர்காலத்தில் மாலிங்க பந்துவீச்சு ஆலோசகராகும் வாய்ப்பு.


இலங்கையின் வேகப்பந்துவீச்சு விற்பன்னர் லசித் மாலிங்க , எதிர்காலத்தில் தேசிய அணியின் பந்துவீச்சு ஆலோசகராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக இலங்கை அணியின் தலைமைப் பயிற்றுநர் மிக்கி ஆர்த்தர் தெரிவித்துள்ளார் .

மேற்கிந்தியத் தீவுகளிலிருந்து கானொளி ஊடாக பேசியபோதே மிக்கி ஆர்த்தர் இதனைத் தெரிவித்தார் . 

மாலிங்கவுடன் இது குறித்து கலந்துரையாடியதாகவும் எதிர்கால இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது மாலிங்க ஓர் ஆசோகராக உள்வாங்கப்படலாம் எனவும் மிக்கி ஆர்த்தர் குறிப்பிட்டார் .

' வெள்ளைப் பந்தைக் கொண்டு விளையாடப்படும் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மாலிங்கவுக்கு சிறந்த அறிவாற்றல் இருக்கின்றது . 

அந்த அறிவாற்றலை இலங்கையின் இளம் கிரிக்கெட் வீரர்களுடன் மாலிங்க பகிர்ந்துகொள்ளவேண்டும் என்பதை பார்க்க விரும்புகின்றேன் ' என்றார் மிக்கி ஆர்த்தர் . 

அவர் ஓர் அருமையான கிரிக்கெட் வாழ்க்கையைக் கொண்டுள்ளார் என எண்ணுகின்றேன் . 

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி கடந்த வருடம் இரத்துச் செய்யப்பட்டதால் அது அவரை விட்டு தொலைவில் சென்றுவிட்டதாக நான் கருதுகின்றேன் . 

ஆனால் , அவரது கிரிக்கெட் வாழ்க்கை மகத்தானது ' என மாலிங்கவின் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து கருத்து வெளியிடுகையில் மிக்கி ஆர்த்தர் குறிப்பிட்டார் .

ப்ரஞ்சைஸ் ( உரிமைத்துவ ) கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக 37 வயதான லசித் மாலிங்க அறிவித்துள்ளபோதிலும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக இதுவரை அறிவிக்கவில்லை . 

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் 2004 இல் அறிமுகமான லசித் மாலிங்க , 30 டெஸ்ட் போட்டிகளில் 101 விக்கெட்களையும் 226 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 338 விக்கெட்களையும் 84 சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 107 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார் . 

ஆடவருக்கான சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 100 விக்கெட்களுக்கு மேல் கைப்பற்றி ஒரே ஒருவர் மாலிங்க ஆவார் . 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 3 தடவைகளும் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளில் 2 தடவைகளும் ஹெட் - ட்ரிக் முறையில் மாலிங்க விக்கெட்களை வீழ்த்தியுள்ளார் . 

அத்துடன் இந்த இரண்டுவகை கிரிக்கட் போட்டிகளில் நான்கு பந்துகளில் 4 வீக்கெட்களை வீழ்த்திய பெருமையையும் லசித் மாலிங்க கொண்டுள்ளார் .

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.