காதலுக்கு மறுப்பு தெரிவித்த ஆசிரியயை கொலை செய்ய முயற்சி..

 காதலுக்கு மறுப்பு தெரிவித்த ஆசிரியயை கொலை செய்ய முயற்சி..


காதலுக்கு மறுப்பு தெரிவித்த ஆசிரியயை கெப் வாகனத்தால் மோதி கொலை செய்ய முயற்சித்த சந்தேக நபர் கடும் நிபந்தனைகளுடன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபரை கெப்பித்திகொல்லாவயில் மாவட்ட நீதவான் மாலிந்த ஹர்ஷன த அல்விஸ் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே அவர் இந்த உத்தரலை பிறப்பித்துள்ளார்.

சந்தேக நபர் 5 இலட்சம் ரூபா இரண்டு சரீரப் பிணையிலும் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை பதவிய பொலிஸ் நிலையத்தில் கையொப்பமிடவும் நீதவானால் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் முறைப்பாட்டாளர்களுக்கும் சாட்சியாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்காமல் இருக்குமாறும் விதிமுறைகளை மீறி செயற்பட்டால் வழங்கப்பட்டுள்ள பிணையை இடைநிறுத்தி விளக்கமறியலில் வைப்பதாகவும் நீதவான் எச்சரித்துள்ளார்.

சந்தேகநபர் கெப் வாகனத்தில் கூலிக்கு சாரதியாக தொழில்செய்பவர். இந்நிலையில் ஆசிரியை பாடசாலையில் கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பும் போதெல்லாம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். 

எனினும் ஆசிரியை அவருடைய காதலை ஏற்க மறுத்துவிட்டார். இதனால் மனவிரக்தியடைந்த சாரதி அவரை பின்தொடர்ந்து சென்று மிரட்டியுள்ளார். இறுதியில் கெப் வண்டியால் மோதி பலத்த காயங்களை ஏற்படுத்தி கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

இதனையடுத்து பொலிஸ்நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுகமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் ஒரு கிலோமீற்றர் தூரம் ஆசிரியை செலுத்திய மோட்டார் சைக்கிளை பின்தொடர்ந்து சென்று திட்டமிட்டே இதனை செய்துள்ளதாக பொலிஸார் நீதி மன்றில் அறிக்கை சமர்பித்துள்ளனர். 

திட்டமிட்டு கொலையை செய்வதற்கு எத்தனித்துள்ளதுடன் சிறிய மற்றும் பெரிய காயங்களை ஏற்படுத்தியமை, சாட்சியை மறைத்தமை, வைத்தியசாலையில் அனுமதிக்காமை மற்றும் கவனயீனமற்ற விதத்தில் வாகனத்தை செலுத்தியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் சந்தேக நபர் மீது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.