நஞ்சு தேங்காய் எண்ணெய்க்கு முன்பாக, நஞ்சு காய்ந்த மிளகாய் – வெளியாகியது புதிய தகவல்.

 நஞ்சு தேங்காய் எண்ணெய்க்கு முன்பாக, நஞ்சு காய்ந்த மிளகாய் – வெளியாகியது புதிய தகவல்.


உணவு இறக்குமதி செய்யும் போது, சுகாதார பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராயும் வேலைத்திட்டமொன்றை உடனடியாக அறிமுகப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அந்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் சமந்த ஆனந்த இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இவ்வாறான வேலைத்திட்டமொன்று இல்லாமை காரணமாகவே, உடம்புக்கு ஒவ்வாத பல உணவு பொருட்களை மக்கள் பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, உணவு இறக்குமதியின் போது, இவ்வாறான சர்ச்சைகள் இதற்கு முன்னராக காலங்களிலும் ஏற்பட்டிருந்தது.

பால் மா மற்றும் காய்ந்த மிளகாய் இறக்குமதிகளின் போதும், இவ்வாறான சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன.

2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கைக்கு 17 நிறுவனங்கள் எஃப்லடோக்சின் பதார்த்தம் அடங்கிய காய்ந்த மிளகாய் 200 மெற்றிக் தொண்ணுக்கும் அதிகமான தொகை இறக்குமதி செய்யப்பட்டு, சந்தைக்கு விடுவிக்கப்பட்டிருந்தது.

இரசாயண ஆய்வு அறிக்கை கிடைக்கப் பெறுவதற்கு முன்னர், காய்ந்த மிளகாய் விடுவிக்கப்பட்டமை குறித்து, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மீது உள்ளக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே, தற்போது தேங்காய் எண்ணெய் இறக்குமதியிலும் இதேபோன்றதொரு பிரச்சினை எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

✶✶⊶⊷⊷❍ 𝑰𝑻𝑴 ❍⊶⊶⊷✶✶

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.